பெண்களை பாதுகாக்க வேண்டும்:ஐ.நா., பொதுச்செயலர் வலியுறுத்தல்

நியூயார்க்:கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய, பெண்கள் மற்றும் சிறுமியர் மீது, குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாகவும், இதனால், அனைத்து நாடுகளும், அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலர், அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.